19 June 2010

பைசா கோபுரத்தை முறியடித்த அபுதாபிக் கட்டடம்








உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியின் பைசா என்ற சாய்ந்த கோபுரத்தை முறியடித்துள்ளது அபுதாபியின் நவீன கட்டடம். அதிகளவில் சாய்ந்திருக்கும் சாதனையில் இத்தாலியின் பைசா கோபுரத்தை அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம் முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பைசா கோபுரம் 4 பாகை சாய்ந்துள்ளது. அதை பின்னுக்குத் தள்ளி கேட் கப்பிற்றல் முதலிடம் பிடித்துள்ளது. பைசா கோபுரத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 18 பாகை கோணத்தில் இது சாய்வாக கட்டப்பட்டுள்ளது.

அபுதாபி தேசிய கண்காட்சி நிறுவனம் இதை கட்டியுள்ளது. உலகின் மிக சாய்ந்த கட்டடம் குறித்து கடந்த ஜனவரியில் கின்னஸ் அமைப்பு மறுஆய்வு செய்தது. அதில் அபுதாபி கட்டடத்துக்கு முதலிடம் தரப்பட்டது.

பைசா கோபுரம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாக சிறிது சாய்வது சிறப்பு. ஆனால், இந்த ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் முடியப் போகும் அபுதாபி கட்டடமே சாய்வாக கட்டப்பட்டுள்ளது.

160 மீற்றர் உயரம் கொண்ட அதில் ஐந்து நட்சத்திர விடுதி அமையப் போகிறது. ஏற்கனவே, துபாயின் புர்ஜ் கலீபா கோபுரமே உலகிலேயே உயர்ந்த கட்டடம் என்ற சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை...
காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை...
தீண்டிய இதயம் நிலையாக வாழ்வதில்லை...
நிலையாக வாழும் இதயம் காதலை விட்டு விலகுவதுமில்லை...

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும்
அதன் “வாசம்” என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும், சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல எம் இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால் நீரிலிருந்தும் பாலை மட்டும் பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம் இரத்தத்திலிருந்து நம் நட்பை பிரிப்பதென்றால்...
எம் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தால் மட்டுமே...!!

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்...
சிலர் அன்பை செயல்களால் உணரலாம்....
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்....
ஆனால் என் அன்பு புரியாது....
அதை காலங்கள் உணர்த்தும் போது.. கண்கள் கலங்கும்...
காரணம்... உயிர் பிரிந்து விடும்....
உங்கள் வருகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்... மீண்டும் வருக...!