16 September 2010

குரோம், இன்டர்நெட் எக்ஸ்ப்லோர், பயர்பாக்சில் பிரைவேட் பிரவுசிங்



நீங்கள் எப்போதும் உங்கள் சொந்த கணினியிலேயே இணையத்தை பயன்படுத்துவீர்கள் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் அலுவலகங்களில் பிறர் கணினிகளையும், நண்பர்கள் கணினிகளையும், பிரவுசிங் மையங்களில் கணினிகளையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

பொதுவாக இணைய உலாவிகளில் நீங்கள் இணையதளங்களை பார்க்கும் போது நீங்கள் பார்த்த தளங்களின் ஹிஸ்டரி, தேடல் எந்திரங்களில் தேடிய தகவல்கள், தரவிறக்கிய கோப்புகளின் விபரங்கள் உள்ளிட்ட தடயங்கள் அந்த இணைய உலாவிகளில் சேமிக்கப்பட்டு விடும்.

உங்களுக்கு அடுத்து வருபவர் நீங்கள் உலவிய விபரங்களை கண்டு கொள்ள முடியும். சில நேரங்களில் பிறர் கணினிகளில் நாம் மின்னஞ்சல் பார்க்கும் போது நமது மின்னஞ்சல், பாஸ்வேர்டை கூட விட்டு வந்து விடுவோம். இது போன்றவை நமக்கு அசௌகரியத்தை தரும்.

இது போன்ற தருணங்களில் நமது இணைய உலாவிகளில் நமது செயல்பாடுகளின் தடயங்களை விடாது தனிப்பட்ட முறையில் உலவுவதற்குதான் பிரைவேட் பிரவுசிங் என்கிறோம். இது பாதுகாப்பானதும் கூட. இந்த வசதியை கூகிள் குரோம் இணைய உலாவி முதலில் அறிமுகப்படுத்தியது. தற்போது பயர்பாக்சின் புதிய பதிப்பான 3.6 லும் இந்த வசதி வந்து விட்டது. இதனை ஐஈ, குரோம், பயர்பாக்சில் எப்படி உபயோகிப்பது? என்று பார்ப்போம்.

மொசில்லா பயர்பாக்சில் :- பயர்பாக்சின் புதிய பதிப்பை (3.6 க்கு மேல்) நிறுவி இருப்பது அவசியம். Tools மெனுவில் Start Private Browsing என்பதனை கிளிக் செய்து கொண்டு இணையத்தில் உலவ ஆரம்பியுங்கள். நீங்கள் உலவிய தடயங்கள் எதுவும் பயர்பாக்சிலோ, நீங்கள் பயன்படுத்திய கணினியிலோ சேமிக்கப்படாது. 

கூகிள் குரோமில் :- குரோம் கன்ட்ரோல் மெனுவில் New incognito window என்பதனை கிளிக் செய்து கொண்டு பிரைவேட் பிரவுசிங் செய்ய துவங்குங்கள்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் :- இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 -ல் இந்த வசதி உள்ளது. Safety மெனுவில் InPrivate Browsing கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியை பெறலாம். ஆனாலும் நான் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை பரிந்துரைக்க போவதில்லை. இன்னமும் பாதுகாப்பற்ற கெட்ட இணைய உலாவியாகவே இது இருக்கிறது.

சீன கூகிள் ஹேக்கர்களால் தாக்கப்பட்டதில் இதில் உள்ள பாதுகாப்பு ஒட்டையையே பயன்படுத்தி உள்ளார்கள். இதை மைக்ரோசாப்ட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறது. மைக்ரோசாப்ட்டுக்கும் இணைய உலாவிக்கும் ஏழாம் பொருத்தம்தான். எப்போதும் மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இருந்து விலகியே இருங்கள். இல்லையெனில் இணையத் திருடர்களுக்கு உங்கள் கணினி கதவை திறந்து வைத்து உள்ளீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கணினிகளை தவிர பிறரது கணினிகளில் நீங்கள் இணையத்தை உபயோகிப்பதாக இருந்தால் இந்த பிரைவேட் பிரவுசிங் முறையை பயன்படுத்துங்கள்.

நன்றி : tvs50.blogspot.com

No comments:

Post a Comment

பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை...
காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை...
தீண்டிய இதயம் நிலையாக வாழ்வதில்லை...
நிலையாக வாழும் இதயம் காதலை விட்டு விலகுவதுமில்லை...

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும்
அதன் “வாசம்” என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும், சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல எம் இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால் நீரிலிருந்தும் பாலை மட்டும் பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம் இரத்தத்திலிருந்து நம் நட்பை பிரிப்பதென்றால்...
எம் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தால் மட்டுமே...!!

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்...
சிலர் அன்பை செயல்களால் உணரலாம்....
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்....
ஆனால் என் அன்பு புரியாது....
அதை காலங்கள் உணர்த்தும் போது.. கண்கள் கலங்கும்...
காரணம்... உயிர் பிரிந்து விடும்....
உங்கள் வருகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்... மீண்டும் வருக...!