பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் இதுவரை 500 மில்லியன் உறுப்பினர்களை பெற்றிருப்பதாக அதன் நிறுவனர் இன்று அறிவித்துள்ளார். இந்த தொகையானது உலக மொத்த சனத்தொகையில் 8 சதவீதமாகும்.
400 மில்லியன் பயனாளிகள் பேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக வெளியான அறிவிப்பே இதன் எண்ணிக்கை விரைவில் 500 மில்லியனாக உயர காரணமாய் அமைந்தது.
பேஸ்புக் வாயிலாக உலகில் உள்ள 500 மில்லியன் பேர் தங்கள் நண்பர்களுடனும் , உடன் பணி புரிந்தவர்களுடனும் தொடர்பில் இருப்பதாக இந்நிறுவன முதன்மை செயலர் மார்க் ஜுக்கேர்பெர்க் இன்று காலை அறிவித்தார்.
இந்த சாதனையை கொண்டாடும் வகையில் பேஸ்புக் கதைகள் என்ற புதிய பயன்பாடு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் இதில் உறுப்பினர்கள் நிஜ வாழக்கை கதைகளை எழுதுவதோடு அதை பிற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
பேஸ்புக் சமூகவலை தளமானது 2004ம் ஆண்டு மார்க் ஜுக்கேர்பெர்க் என்பவரினால் அவரது நண்பர்களான எடுயுரடொ சவெரின் , டஷ்டின் மொஸ்கொவிட்ஷ் மற்றும் கிரிஷ் ஹக்ஷ் ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.
இவர்கள் அனைவரும் ஹார்ட்வார்ட் பலகலைக் கழகத்தில் ஒன்றாக படித்து வந்தனர். மாணவர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சமூக வலைத்தளம் தற்போது உலகம் முழுதிலும் சுமார் 1400 பேருக்கு பணி வாய்ப்பினையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
24 July 2010
19 June 2010
பைசா கோபுரத்தை முறியடித்த அபுதாபிக் கட்டடம்
இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பைசா கோபுரம் 4 பாகை சாய்ந்துள்ளது. அதை பின்னுக்குத் தள்ளி கேட் கப்பிற்றல் முதலிடம் பிடித்துள்ளது. பைசா கோபுரத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 18 பாகை கோணத்தில் இது சாய்வாக கட்டப்பட்டுள்ளது.
அபுதாபி தேசிய கண்காட்சி நிறுவனம் இதை கட்டியுள்ளது. உலகின் மிக சாய்ந்த கட்டடம் குறித்து கடந்த ஜனவரியில் கின்னஸ் அமைப்பு மறுஆய்வு செய்தது. அதில் அபுதாபி கட்டடத்துக்கு முதலிடம் தரப்பட்டது.
பைசா கோபுரம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாக சிறிது சாய்வது சிறப்பு. ஆனால், இந்த ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் முடியப் போகும் அபுதாபி கட்டடமே சாய்வாக கட்டப்பட்டுள்ளது.
160 மீற்றர் உயரம் கொண்ட அதில் ஐந்து நட்சத்திர விடுதி அமையப் போகிறது. ஏற்கனவே, துபாயின் புர்ஜ் கலீபா கோபுரமே உலகிலேயே உயர்ந்த கட்டடம் என்ற சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)

