08 August 2010

நம் கணினிக்கு ஆகும் மின்சார செலவை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்.

நம் கணினிக்கு தினசரி ஆகும் மின்சார செலவை துல்லியமாக கண்டுபிடிக்கலாம். திரைக்கு (Monitor) ஆகும் மின்சாரம் முதல் டிஸ்க் (வன்தட்டு) -க்கு ஆகும் மின்சாரம் வரை அத்தனையையும் மிகச்சரியாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.


கண்டுபிடிப்பில் கூகுள்  மட்டுமல்ல நாங்களும் தான் என்று சொல்லும் அளவிற்கு ’தல’ மைக்ரோசாப்ட்-ன் அடுத்த கண்டுபிடிப்பு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. கணினிக்கு ஆகும் மின்சார செலவை மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கலாம் என்ற புது சாதனையை மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர். மென்பொருளின் பெயர் ”ஜோல் மீட்டர்” இந்த மென்பொருளை இங்கு இருக்கும் சுட்டியை சொடுக்கித் தரவிரக்கிக் கொள்ளுங்கள்.


Download Here...


கணினி ஆன் செய்ததில் இருந்து இதுவரை எவ்வளவு மணி நேரம் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இதற்கு ஆகும் மின்சாரம் என்ன என்பதை கிலோவாட்ஸ் -ல் நமக்கு சொல்கின்றனர். நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் மின்சார வரியைப் போட்டு நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


நன்றி:- வின்மணி

No comments:

Post a Comment

பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை...
காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை...
தீண்டிய இதயம் நிலையாக வாழ்வதில்லை...
நிலையாக வாழும் இதயம் காதலை விட்டு விலகுவதுமில்லை...

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும்
அதன் “வாசம்” என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும், சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல எம் இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால் நீரிலிருந்தும் பாலை மட்டும் பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம் இரத்தத்திலிருந்து நம் நட்பை பிரிப்பதென்றால்...
எம் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தால் மட்டுமே...!!

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்...
சிலர் அன்பை செயல்களால் உணரலாம்....
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்....
ஆனால் என் அன்பு புரியாது....
அதை காலங்கள் உணர்த்தும் போது.. கண்கள் கலங்கும்...
காரணம்... உயிர் பிரிந்து விடும்....
உங்கள் வருகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்... மீண்டும் வருக...!