29 August 2010

வெள்ளவத்தை

|||||வெள்ளவத்தை|||||||

கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் - அதிகமாகத் தமிழ் பேசுவோரே வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06).

பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம்.

வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது!
****************************************************

கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு!

நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால்
ஏனைய வெள்ளவத்தைவாசிகளும் கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து!

ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்

பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம் எனினும்
பெருமளவு வெளிநாட்டுப் பணமும் உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம் பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால் இது ஒரு குட்டி லண்டன் அல்லது டொரன்டோ(வேறேதாவது வெளிநாட்டு நகரங்களாயிருந்தாலும் போட்டுக்கலாம்).

அடுக்குமாடிகளின் (அபார்ட்மென்ட்) அணிவகுப்புகள்
ஒவ்வொரு வீதியிலும் இரண்டு மூன்று அடுக்குமாடிகள்
கிடைக்கும் சிறுதுண்டு நிலத்திலும் ஒடுக்கி முடுக்கி ஒரு அபார்ட்மெண்ட் முளைவிடவைக்கும் மூளை படைத்தோர் எங்கள் பொறியிலாளர்!

வீட்டிற்குள்ளே பைப்பில் நீர் வரத்து குறைவெனிலும்
மழை பெய்யும் காலத்தில் வீதியில் குளமே கட்டிப் பாசனம் செய்யலாம்!

எங்கள் வெள்ளவத்தை வீதிகளில் விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒடும்! பென்ஸ்,பீ எம் டபிள்யூ,பஜிரோ,லாண்ட்ரோவர்,பெராரி இன்னும் ரோல்ஸ் ரோய்ஸ் கூடக் காணலாம்.

குண்டு குழி வீதிகளில் குலுங்காமல் இவை பயணிக்க புதியதாய் நுட்பங்கள் யாராவது உருவாக்க வேண்டும் இனி!


பேரம் பேசாமல் கேட்பதை சந்தையில் அள்ளிக் கொடுத்து சாதாரண மரக்கறி விலைகளையும் சர்வதேச சந்தை விலையாக உயர்த்தியவர்களும்
எங்கள் வெள்ளவத்தைத் தமிழரே!

எனினும் தமிழ் மொழியாக்கத்தில் தீவிரமானவர்கள் நாம்!

காய்கறிக் கடைக்காரர் முதல் காக்கிச் சட்டைக்காரர் வரை அனைவருமே தமிழறிவர் வெள்ளவத்தையில்!

பஸ் கண்டக்டர் கூட வெள்ளவத்தை வந்தால்
தமிழிலே பேசித்தான் டிக்கெட் கொடுப்பார்!

பேச்சு வெற்றியளிக்கும் என்பது இங்கே மட்டும் பெருமளவில் உண்மை! பேசிப் பேசியே (தமிழன்) தமிழ் தெரியாதவரும் தமிழிலேயே பேசுவர்!

எட்டுத்திசையும் அச்சமின்றித் தமிழ் முழங்கும் தலைநகரின் தமிழ்த் தலைநகரம்...

தடுக்கி விழுந்தால் ஆலயம்...
தடுமாறி விழுந்தால் சைவக்கடை...
ஊர் முழுவதும் நகைக்கடையும் புடவைக்கடையும்
நிரம்பி வழியும் எம்மவரின் வெளிநாட்டுப் பணத்தினால்!

பொலீஸ் பதிவுகளும் இங்குதான் அதிகம்.
பொலீஸ் கைதுகளும் இங்கு தான் அதிகம்.
வெள்ளை வான்களும் அதிகளவில் அலையும்.
வீதிக்கு வீதி லொட்ஜ்களில் செக்கிங் உண்டு.
எனினும் வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி விடுப்புகள் பேசியும் வீராப்பாய் வீண் வீரம் பேசியும் நிற்கும் எம் இளைஞர்களைக் கண்டால் வாழ்வது நாம் வடக்கிலா கிழக்கிலா என்ற எண்ணம் எட்டிப் பார்க்கும்!

அண்மைக்கால வெள்ளவத்தையில் புதியதோர் மாற்றம்....

ஆன்டிமார் என்ன ஆச்சிமார் கூட நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை...!

முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய் முகம் தவிர வெறெதையும் மூடாத புதிய மகளீர்....

கண்களுக்கு விருந்தளிக்கும் கவர்ச்சி catwalk இப்போது
எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம்!

வெறெங்கு எந்த மொழியில் விளம்பரம் செய்தாலும்
வெள்ளவத்தையில் மட்டும் தமிழ் இல்லையெனில்
வியாபாரம் படுத்துவிடும்!

வங்கி வட்டிக்கடை முதல் வாடகைக் கார் வரை!

(அதில் பாதித் தமிழ் தமிழாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை)

காலை வேளைகளில் கடற்கரையோரம் இன்னுமொரு வேடிக்கை..

நாள் முழுதும் சாப்பிட்டு சேர்த்ததெல்லாம் குறைக்க காலில் சப்பாத்து அணிந்து அங்கிள்மாரும், ஆன்டிமாரும் அணிவகுத்து நடை பழகுவார்கள்..

உடல் மெலிவோ,கொழுப்போ காலையில் பீச் வோக்கிங் போகாவிட்டால் பாஷன் இல்லைப் பாருங்கோ..

நம்ம வெள்ளவத்தைப் பெண்களின் தமிழே தனியான தமிழ் தான்..

ஆங்கிலேய அழகிகளும் தோற்றுப் போவர் அவர்கள் ஆங்கில உச்சரிப்பில் ..

ஆனாலும் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று மிக்ஸ் பண்ணி மிதப்புக் காட்டுவதில் எங்கள் வெள்ளவத்தை பெண்மணிகளை யாருமே வெல்ல முடியாது

(நாங்களும் தான் அந்த ஸ்டைலில் டமில் பேசப் பார்க்கிறோம்.. ம்கூம் முடியவே இல்லை.. அது எங்கள் பெண்களுக்கு மட்டுமே முடியுது)

குண்டுகள் எங்கு வெடித்தாலும் குண்டுகளை எங்கே போட்டாலும் கோவில்கள் எங்கள் பெண்களால் நிறையும்.

அவருடல்களில் தங்கங்கள் விளையும்..
உடல் தழுவிப் பட்டாடைகள் நெளியும்!

கல்யாணங்களோ காசால் களைகட்டும்..
தமிழ்நாடும் தோற்றுப் போகும் தடல்புடலில்.

கிடைக்கும் நிலமெல்லாம் கோடி கொடுத்து வாங்கவும்
நம்மவர் தயாரென்பதால் இலங்கையின் வேறு பல கோடிகளுக்கு ஓடிவிட்டார்கள் சிங்களவர்

வெகுவிரைவில் வெள்ளவத்தை முழுவதும்..... (இனிமேல் எல்லாமே நாங்கதான்)

நன்றி : அதிசஜன் என்கிற விஜயகுமார்

No comments:

Post a Comment

பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை...
காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை...
தீண்டிய இதயம் நிலையாக வாழ்வதில்லை...
நிலையாக வாழும் இதயம் காதலை விட்டு விலகுவதுமில்லை...

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும்
அதன் “வாசம்” என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும், சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல எம் இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால் நீரிலிருந்தும் பாலை மட்டும் பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம் இரத்தத்திலிருந்து நம் நட்பை பிரிப்பதென்றால்...
எம் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தால் மட்டுமே...!!

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்...
சிலர் அன்பை செயல்களால் உணரலாம்....
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்....
ஆனால் என் அன்பு புரியாது....
அதை காலங்கள் உணர்த்தும் போது.. கண்கள் கலங்கும்...
காரணம்... உயிர் பிரிந்து விடும்....
உங்கள் வருகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்... மீண்டும் வருக...!